சீன எல்லையில் நிறுத்த அமெரிக்க பீரங்கிகளை வாங்க பாதுகாப்பு கவுனில் ஒப்புதல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அமெரிக்கத் தயாரிப்பான இலகு ரக பீரங்கிகளைக் கொள்முதல் செய்ய மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

அமெரிக்கத் தயாரிப்பான ரூ.3 ஆயிரம் கோடி மதிப்புடைய 145 இலகு ரக எம்777 பீரங்கிகள், ரூ.3 ஆயிரம் கோடி மதிப்புடைய 65 எல்-70 ஏர் கன் ரேடார்கள், ரூ.480 கோடி மதிப்புடைய பயிற்சி கப்பல், ரூ.350 கோடி மதிப்புடைய கூட்டு விமானப்படை மற்றும் ராணுவ சாதனங்கள் ஆகியவற்றை கொள்முதல் செய்ய பாதுகாப்பு தளவடாங்கள் கொள்முதலுக்கான கவுன்சில் அனுமதித்துள்ளது.

பிஏஇ சிஸ்டம் நிறுவனத் தயாரிப்பான இத்தகைய பீரங்கிகளை சீன எல்லைப் பகுதிகளான காஷ்மீரின் லடாக், வடகிழக்கில் அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மலைப்பாங்கான களங்களில் பயன்படுத்த முடியும். இதன் எடை குறைவு என்பதால் ஹெலிகாப்டர்கள் மூலமாக சுலபமாகவும், துரிதமாகவும் கொண்டு செல்ல முடியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+