டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்துப் பேசினார் மாலத்தீவு அதிபர் வஹீத்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்தியா வருகை தந்துள்ள மாலத்தீவு அதிபர் முகமது வஹீத் டெல்லியில் பிரதமர் மன்மோகனை இன்று சந்தித்துப் பேசினார்.
மாலத்தீவு அதிபராக இருந்த நஷீத் வெளியேற்றப்பட்ட நிலையில் முகமது வஹீத் புதிய அதிபராகப் பொறுப்பேற்றார். இது தொடர்பாக ஏற்பட்ட அரசியல் குழப்பநிலையை இந்தியா தீர்த்து வைத்தது. அந்நாட்டின் அதிபரான பின்னர் முதல் முறையாக வஹீத் இந்தியா வருகை தந்துள்ளார்.
டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங்குடன் நடந்த சந்திப்பின் போது மாலத்தீவில் நஷீத் ஆதரவாளர்கள் கோருவது போல முன்கூட்டியே தேர்தலை நடத்துவது பற்றி வஹீத் ஆலோசனை நடத்தினார்.
ஐந்து நாள் பயணமாக வந்துள்ள வஹீத் மே 15-ந் தேதி வரை சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.
கடந்த மூன்றுவாரங்களுக்கு முன்பு நஷீத், இந்தியாவுக்கு வருகை தந்திருந்த நிலையில் வஹீத்தின் பயணமும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications