வடகிழக்கில் காலூன்றும் மாவோயிஸ்டுகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குவோம்: ப.சிதம்பரம் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

இடாநகர்: வடகிழக்கு மாநிலங்களில் காலூன்றும் மாவோயிஸ்டுகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குமாறு மாநில அரசுகளை உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

அருணாசலப் பிரதேசத்தில் சீனா எல்லையையொட்டிய பகுதிகளில் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் ப.சிதம்பரம் கூறியதாவது:

வடகிழக்கு மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் அமைதியை சீர்குலைத்து வருவதை மாநில அரசுகளை தடுத்து நிறுத்த வேண்டும். அவர்களோடு எந்த சமரசத்துக்கும் இடமில்லை. மாவோயிஸ்டுகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அசாம், அருணாசலப்பிரதேசத்தில் குறைந்த எண்ணிக்கையில்தான் மாவோயிஸ்டுகள் உள்ளனர். அவர்களை ஒடுக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+