வாங்க.. ஒன்னா போராடலாம்: தலைமை தளபதி வி.கே.சிங்குக்கு அன்னா அழைப்பு!

Subscribe to Oneindia Tamil

Anna Hazare and VK Singh
டெல்லி: ஊழலுக்கு எதிரான தங்களது போராட்டத்தில் இணையுமாறு நாட்டின் ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங்கு சமூக சேவகர் அன்னா ஹசாரே அழைப்பு விடுத்துள்ளார்.

டிவிட்டரில் இது தொடர்பாக உலா வரும் தகவல்கள்....

அன்னா ஹசாரேயின் குழுவில் இடம்பெற்றுள்ள சுரேஷ் பதாரே டிவிட்டரில் தட்டிவிட்டிருப்பது:

அன்னா ஹசாரேயின் ஊழலுக்கு எதிரான தேசிய இயக்கத்தில் ஓய்வுக்குப் பிறகு தலைமை தளபதி வி.கே.சிங் இணைய விரும்பினால் நாங்கள் அவரை வரவேற்போம்.

அன்னாவின் தளபதிகளில் ஒருவரான கிரண்பேடி டிவிட்டரில் தட்டியிருப்பது:

வி.கே.சிங்க்கு அன்னா ஹசாரே அழைப்பு விடுத்திருப்பது மிகச் சரியானது. ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற ஒருவர் ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்தால் நிச்சயம் அது வலுவானதாகவே இருக்கும்..

இப்படி டிவிட்டர் வழியாக அன்னா ஹசாரே அணியினர் இப்பொழுதுதான் முதல் முறையாக வி.கே.சிங்குக்கு நேரடியாக அழைப்பு விடுத்துள்ளனர்.

ராணுவத்தில் லஞ்சம் தொடர்பாக வி.கே.சிங் கருத்து தெரிவித்தபோது தங்களது ஆதரவு அவருக்கு உண்டு என்று அன்னா குழுவின் அரவிந்த் கெஜ்ர்ரிவால் கடந்த மாதம் கூறியிருந்தார்.

ராணுவ தளபதி வி.கே.சிங்கின் பதவிக் காலம் வரும் 31-ந் தேதியுடன் முடிவடைகிறது. அதன் பின்னர் கிரண்பேடி, சந்தோஷ் கெளடா பாணியில் அவரும் அன்னா குழுவில் ஐக்கிய்மாவாரா என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+