For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியாவின் தங்க மகன் சச்சின் டெண்டுல்கர்: மமதா பானர்ஜி பாராட்டு

By Mathi
Google Oneindia Tamil News

கொல்கத்தா: இந்தியாவின் தங்க மகன் சச்சின் டெண்டுல்கர் என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி புகழாரம் சூட்டினார்.

கிரிக்கெட் போட்டிகளில் சதத்தில் சதமடித்த சச்சினுக்கு கொல்கத்தாவின் ஈடன் மைதானத்தில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மமதா பானர்ஜி பேசியதாவது:

சச்சின் இந்தியாவின் தங்க மகன், எனவேதான் அவருக்கு தங்கத்தினால் ஆன கிரிக்கெட் பேட், பந்தை எங்கள் மாநிலம் சார்பில் பரிசாக அளித்துள்ளோம். உங்கள் சாதனைக்காக நாங்கள் தலைவணங்குகிறோம். உங்களால் அனைவருமே பெருமையடைந்துள்ளோம் என்றார் அவர்.

ஏற்புரையில் பேசிய சச்சின், உங்கள் அனைவரது ஆதரவுக்கும் நன்றி. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பலமுறை விளையாடியுள்ளேன். அவை மகிழ்ச்சிகரமான அனுபவம். இப்போது இந்த பாராட்டு விழாவும் மறக்க முடியாத நிகழ்வாக அமைந்துள்ளது. எனக்கும், இந்திய கிரிக்கெட் அணிக்கும் கொல்கத்தா மக்கள் எப்போதும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.

சச்னிக்கு தங்கத்தால் வடிவமைக்கப்பட்ட பேட், பந்தை சச்சினுக்கு மம்தா வழங்கினார். மேற்குவங்கத்தில் பிரபலமான இனிப்பு வகையான 100 ரசகுல்லாக்கள் அவருக்கு வழங்கப்பட்டது.

கொல்கத்தா கிரிக்கெட் வாரியத் தலைவர் டால்மியாவும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று சச்சினுக்கு பரிசுகளை வழங்கினார்.

English summary
West Bengal chief minister Mamata Banerjee on Saturday described Sachin Tendulkar as a 'golden boy' as the state government and the Cricket Association of Bengal jointly felicitated the senior Indian batsman for completing one hundred international centuries.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X