தேனியில் நாளை முதல் 19-ந் தேதி வரை ராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு முகாம்
Subscribe to Oneindia Tamil
தேனி: இந்திய ராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு முகாம் நாளை முதல் மே 19-ந் தேதி வரை தேனியில் நடைபெறுகிறது.
இந்திய ராணுவத்தில் சோல்ஜர் டிரேட்ஸ்மென், சோல்ஜர் ஜெனரல் டியூட்டி, சோல்ஜர் நர்சிங் அசிஸ்டண்ட், சோல்ஜர் டெக்னிக்கல், சோல்ஜர் கிளார்க் மற்றும் ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பணி இடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்யும் முகாம் தேனி மாவட்ட விளையாட்டரங்கில் நாளை திங்கள்கிழமை முதல் மே19-ந் தேதி வரை நடைபெறுகிறது.
இப்பணிகளுக்கு எட்டாம் வகுப்பு, எஸ்.எஸ்.எல்.ஸி., ப்ளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் தகுதியானவர்கள்.
இம் முகாமில் தேனி, திண்டுக்கல், மதுரை, கோவை, நீலகிரி, திருப்பூர், நாமக்கல், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய 11 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications