உலகின் சக்திவாய்ந்த அம்மாக்கள் பட்டியலில் ஹிலாரி, சோனியா, இந்திரா நூயி
Subscribe to Oneindia Tamil

அன்னையர் தினத்தை முன்னிட்டு போர்ப்ஸ் பத்திரிகை அம்மா ஸ்பெஷல் ஒன்றை வெளியிட முடிவு செய்தது! அரசியல், தொழில்துறை, கலைத்துறை என பலதுறைகளிலும் இருக்கும் அம்மாக்களை ஆராய்ந்து 20 சக்தி வாய்ந்த அம்மாக்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
64 வயதான அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரிக்கு முதலிடம், 64 வயதான பிரேசில் அதிபர் தில்மா ரூசெப்க்கு 2-வது இடம் கிடைத்திருக்கிறது.
பெப்ஸி நிறுவன தலைவராக உள்ள 56வயது இந்திரா நூயிக்கு 3 வது இடம் கிடைத்திருக்கிறது. நம்ம காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவுக்கு 6 வது இடம், ஒபாமாவின் மனைவி மிச்செல்லுக்கு 7வது இடம், மியான்மரின் ஆங்சான் சூயிக்கு 20வது இடம் வழங்கியிருக்கிறது போர்ப்ஸ்.












Click it and Unblock the Notifications