பிளஸ் 2 மாணவர்களுக்கு அக்டோபருக்குள் லேப்டாப் விநியோகம்
சென்னை: தமிழ்நாட்டில் பிளஸ் 2 மாணவர்கள் அனைவருக்கும் வரும் அக்டோபர் மாதத்துக்குள் அரசின் இலவச லேப்டாப் வழங்கப்பட்டுவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள், கலை, அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள், பாலிடெக்னிக் மாணவர்கள், பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் என மொத்தம் 9 லட்சம் பேருக்கு இலவச லேப்-டாப்புகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
சென்னை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்கெனவே பிளஸ் 2 மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் பணி தொடங்கியது. இதுவரை 62 ஆயிரம் பேருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் மூலமாக வழங்கப்பட்டு வரும் இந்த லேப்டாப்புகள் பிற மாவட்டங்களிலும் விநியோகிக்கப்பட உள்ளன.
சான்றிதழில் முத்திரை?
பிளஸ் 2 மாணவர்களுக்குக் கொடுக்கப்பட உள்ள மதிப்பெண் சான்றிதழில் லேப்-டாப் கொடுத்ததற்கான முத்திரையும் இடப்படக் கூடும். லேப்-டாப் பெறாத மாணவர்களுக்கும் அதற்கான முத்திரையும் மதிப்பெண் சான்றிதழிலேயே இடப்படும். இந்த முத்திரையைக் காண்பித்து லேப்-டாப்புகள் தயாரான பிறகு பெற்றுக்கொள்ளலாம் என்பதற்காக இத்தகைய ஒரு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
அரசின் லேப்டாப்புகளை லெனோவா, எச்.சி.எல்., ஏசர், எச்.பி., விப்ரோ, ஆர்.பி. இன்போசிஸ்டம்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரித்து வழங்குகின்றன,












Click it and Unblock the Notifications