+2 தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு அரசு நோட்டீஸ்!
சென்னை: +2 பொது தேர்வில் தேர்ச்சி சதவீதம் குறைந்த அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப தமிழக பள்ளி கல்வி துறை முடிவு செய்துள்ளது.
தமிழக பள்ளி கல்வி துறை பத்தாம் வகுப்பு மற்றும் +2 பொது தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்தவும், அரசு பள்ளி மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்தவும் ஆசிரியர்களுக்கு சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.
இதில் தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களின் கல்வி தகுதியை உயர்த்தி தேர்ச்சி அடைய வைப்பது முக்கிய திட்டமாக எடுத்துக் கொள்ளப்பட்டது. அதேபோல் கடந்த ஆண்டு அதிக தேர்ச்சி பெற்ற பள்ளி ஆசிரியர்களை கொண்டு குறைந்த சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இதற்கு அடுத்தபடியாக பத்தாம் வகுப்பு, +2 பொது தேர்வுகளில் மாணவ, மாணவிகள் குறைந்த சதவீதம் தேர்ச்சி பெற காரணமாக இருந்த அரசு பள்ளி ஆசிரியர்கள், கல்விதுறைக்கு பதில் அளிக்க உத்தரவிடப்பட்டது.
கடந்த ஆண்டு பொது தேர்வுகளில் மாணவர்கள் 60 சதவீதத்திற்கும் குறைவாக தேர்ச்சி சதவீதம் பெற காரணமாக இருந்த ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வி துறை சார்பில் ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இது தவிர அனைத்து அரசு பள்ளிகளிலும் ஒரு மாதம் மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டன. இவ்வாறு இந்த ஆண்டில் பல புதிய நடவடிக்கைகளை கல்வி துறை அறி்முகப்படுத்தி செயல்படுத்தியது.
ஆனால் பள்ளி கல்விதுறை முயற்சிக்கு அவ்வளவாக வெற்றி கிடைக்கவில்லை. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு குறைவாக தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் பட்டியலை தயாரித்து அனுப்ப கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் தேர்ச்சி சதவீதம் குறைந்த அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப பள்ளி கல்வி துறை முடிவு செய்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications