தெலுங்குதேசம் எம்.எல்.ஏ. கொலையில் ஜெகனுக்கு தொடர்பு: சிபிஐ விசாரணை கோரி மனைவி உண்ணாவிரதம்
ஹைதராபாத்: சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு தனது கணவர் கொலையில் தொடர்பு இருப்பதாகவும், அவரிடம் இது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கூறி தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. பரிதலா சுனிதா உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ. பரிதலா ரவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்டார். அவரது கொலையில் ஜெகன்மோகன் ரெட்டிக்கு தொடர்பு உள்ளது என்று ரவியின் மனைவி பரிதலா சுனிதா புகார் தெரிவித்தார். இதையடுத்து அப்போதைய ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி இந்த கொலை சம்பவம் குறித்து விசாரிக்குமாறு சிபிஐ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அவர்களும் விசாரணை நடத்தி ரவியின் கொலைக்கும், ஜெகனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்தனர்.
இந்நிலையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது குறித்து அறிந்த ரவியின் மனைவி தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. பரிதலா சுனிதா சந்தோஷப்பட்டுள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
எனது கணவர் பரிதலா ரவி கொலையில் ஜெகன்மோகன் ரெட்டிக்கு தொர்டபு உள்ளது. அதனால் இது குறித்து அவரிடம் சிபிஐ மீண்டும் விசாரிக்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி நான் உண்ணாவிரதம் இருக்கவிருக்கிறேன் என்றார்.
அவர் கூறியவாறே இன்று அனந்தபுரம் மாவட்டம் ரலஸ்தாரு நகரில் உள்ள அம்பேத்கார் சிலை அருகே அமர்ந்து உண்ணாவிரத்தத்தை துவங்கினர். இதில் தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications