பெற்றோரை அதிர்ச்சியடைவைக்கும் நோட்டுகள், ஸ்கூல் பேக்குகள் விலை
Subscribe to Oneindia Tamil

கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதையடுத்து நோட்டு, டிபன் பாக்ஸ், ஸ்கூல் பேக், வாட்டார் பாட்டில் உள்ளிட்ட பள்ளி மாணவர்களின் உபகரணங்கள் ஏராளமாக கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளன. ஆனால் இவை கடந்த ஆண்டை விட 15 விழுக்காடு முதல் 50 விழுக்காடு வரை உயர்ந்துள்ளது.
இதுவரை ரூ.10க்கு விற்கப்பட்ட ஒரு குயர் நோட்டு 15 ரூபாயாக உயர்ந்துள்ளது. ரூ.20 முதல் 22 வரை விற்கப்பட்ட லாங்சைஸ் நோட்டு ரூ.26 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் பிளாஸ்டிக் சினாக்ஸ் மற்றும் டிபன் பாக்ஸ், வாட்டார் பாட்டில், போன்றவை குறைந்த பட்ச விலையாக ரூ.25லிருந்து ரூ.35 மற்றும் 40ஆக உயர்ந்துள்ளது. 50 ரூபாய்க்கு கிடைத்த சிறிய ஸ்கூல் பேக் 75 ரூபாகியுள்ளது. பெரிய அளவிலான ஸ்கூல் பேக்குகள் 275 ரூபாயில் இருந்து ரூ.350 ஆக உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications