இடைத்தேர்தல்: விஜயகாந்த் மீது தேர்தல் விதிமீறல் வழக்கு

புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தேமுதிக சார்பில் ஜாகீர் உசேன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் புதுக்கோட்டையில் 3 நாட்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார். அவரைத் தொடர்ந்து விஜயகாந்த் நேற்று புதுக்கோட்டையில் தனது பிரச்சாரத்தை துவங்கினார். நாளையுடன் பிரச்சாரத்தை முடித்துக் கொள்கிறார்.
மாங்கோட்டை பகுதியில் விஜயகாந்த் பேச்சைக் கேட்க பெருங்கூட்டம் கூடிவிட்டது. அவரும் தனது ஸ்டைலில் பேசி மக்களிடம் ஆதரவு கேட்டார்.
இந்நிலையில் கறம்பக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் பிரச்சாரத்திற்கு சென்ற அவர் வாகனத்துடன் தேர்தல் ஆணையம் அனுமதித்ததைவிட அதிக அளவிலான கார்கள் சென்றுள்ளன. இது தவிர தேர்தல் விதிகளை மீறி அதிக அளவில் கட்சி கொடிகளும், பேனர்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து விஜயகாந்த் மீது ஆலங்குடி போலீசார் தேர்தல் விதிமீறல் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
புதுக்கோட்டை தொகுதியில் வரும் 12ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த இடைத்தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும் என்று அதிமுகவும், இதிலாவது திராணியை நிரூபிக்க வேண்டும் என்று தேமுதிகவும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications