For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குடியரசுத் தலைவர் தேர்தல்: அத்வானியிடம் ஆதரவு கோரினார் சங்மா

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: அதிமுக மற்றும் பிஜூ ஜனதா தளம் கட்சிகளால் குடியரசுத் தலைவர் வேட்பாளராக முன்நிறுத்தப்பட்டுள்ள மக்களவை முன் சபாநாயகர் பி.ஏ.சங்மா இன்று பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவர் அத்வானியை நேரில் சந்தித்தார். குடியரசுத் தலைவர் தேர்தலில் தம்மை பாஜக ஆதரிக்க வேண்டும் என்று இச்சந்திப்பின் போது சங்மா கேட்டுக் கொண்டார்.

அதிமுகவின் ஜெயலலிதா, பிஜூ ஜனதா தளத்தின் நவீன்பட்நாயக் ஆகியோர் பி.ஏ.சங்மாவை குடியரசுத் தலைவர் வேட்பாளராக முன் நிறுத்தியுள்ளனர். சங்மாவும் தம்மையே மற்ற கட்சிகளும் ஆதரிக்க வேண்டும் என்று பல்வேறு கட்சித் தலைவர்களிடமும் வலியுறுத்தி வருகிறார். ஏற்கெனவே சுஸ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி, பிரகாஷ் காரத், நிதிஷ் குமார், டி. ராஜா, முலாயம்சிங் ஆகியோரை நேரில் சந்தித்து தமக்கு ஆதரவளிக்கக் கோரியிருக்கிறார்.

இந்நிலையில் எல்.கே. அத்வானியையும் சங்மா சந்தித்து தமக்கு ஆதரவு கோரியிருக்கிறார். நாட்டின் உயரிய பதவியான குடியரசுத் தலைவர் பதவிக்கு நாடு விடுதலை அடைந்த பிறகு எந்த ஒரு பழங்குடி இனத்தலைவரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதால் தம்மை தேர்ந்தெடுக்க ஆதரவளிக்க வேண்டும் என்பது சங்மாவின் கோரிக்கை.

English summary
After being nominated by regional parties like BJD and AIADMK as presidential candidate, NCP leader PA Sangma on Friday met veteran BJP leader LK Advani seeking his party's crucial support for his candidature for the country’s top job.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X