வக்கீல்களுடன் பேச திகார் கைதிகளுக்கு தொலைபேசி வசதி: ஆ.ராசாவின் 'ஐடியா' பரிசீலனை!
டெல்லி: திகார் சிறை கைதிகள் தங்கள் வழக்கறிஞர்களுடன் தொலைபேசியில் பேச அனுமதி அளிக்க வேண்டும் என்ற முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசாவின் யோசனையை டெல்லி அரசு பரிசீலித்து வருகிறது.
2ஜி வழக்கில் கைதாகி திகார் சிறையில் 15 மாதங்களாக இருந்த முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா ஜாமீனில் வெளியே வருவதற்கு முன்பு டெல்லிக்கு அரசு்க்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் திகார் சிறைக் கைதிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை விளக்கமாகத் தெரிவி்த்ததோடு கைதிகளை தங்கள் வழக்கறிஞர்களுடன் தொலைபேசியில் பேச அனுமதி அளிக்க வேண்டும் என்று மாநில அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.
ராசாவின் கடிதம் குறித்து கருத்து தெரிவிக்குமாறு டெல்லி சட்ட அமைச்சகத்தை அம்மாநில முதல்வர் அலுவலகம் கேட்டுக் கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது.
திகார் சிறையில் உள்ள விசாரணைக் கைதிகள் தங்கள் நண்பர்கள், உறவினர்களுடன் வாரத்தின் 7 நாட்களும் 5 நிமிடம் வரை பேச அனுமதிக்கப்படுகிறார்கள். உள்ளூர் அழைப்புக்கு ரூ.100ம், வெளியூர் அழைப்புக்கு ரூ.200ம் மாதாந்திரக் கட்டணமாக கைதிகளிடம் இருந்து சிறைத் துறை வசூல் செய்கிறது. ஆனால் கைதிகள் தங்கள் வழக்கறிஞர்களுடன் பேச அனுமதிக்கப்படுவதில்லை. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்போது மட்டுமே கைதிகள் வழக்கறிஞர்களை சந்தித்து பேச முடியும்.
பல சமயம் தகவல் தொடர்பு இல்லாததால் வழக்கறிஞர்கள் விசாரணையின்போது ஆஜராகாமல் இருந்துவிடுகிறார்கள். கடந்த 15 மாதங்களாக திகாரில் இருந்த ஆ.ராசா இந்த சிக்கல்களை எல்லாம் உணர்ந்து தான் கைதிகளை வழக்கறிஞர்களுடன் தொலைபேசியில் பேச அனுமதிக்கக் கோரி மாநில அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார் என்று கூறப்படுகிறது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications