எண்ணெய் விலை குறைவால் நடுத்தர மக்கள் நிம்மதி

தமிழகத்தில் அண்மையில் அரிசி மற்றும் பருப்பு, சர்க்கரை விலை அடுத்தடுத்து கடுமையாக உயர்ந்தது. இதனால் நடுந்தர வர்க்கத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் மக்களுக்கு சற்று நிம்மதி அளிக்கும் வகையில் எண்ணெய் விலை குறைய தொடங்கியுள்ளது.
அதாவது கடந்த மாதம் பாமாயில் 1 லிட்டர் ரூ.68க்கு விற்பனை செய்யப்பட்டது. இது தற்போது 4 ரூ குறைந்து ரூ.64க்கு விற்கப்படுகிறது. சன் பிளவர் ஆயில் ரூ.86லிருந்து ரூ.82ஆக குறைந்துள்ளது. இதுபோல் அக்மார்க் நல்லெண்ணெய் ரூ.150லிருந்து ரூ.140க்கும், ரூ.130க்கும், சாதா தேங்காய் எண்ணெய் ரூ.110லிருந்து ரூ.100க்கும், கடலை எண்ணெய் ரூ.130லிருந்து ரூ.125க்கும், வனஸ்பதி ரூ.80லிருந்து ரூ.75க்கும் விலை குறைந்துள்ளது.
மேலும் சீரகம் 1 கிலோ ரூ.220லிருந்து ரூ.170 ஆகவும், மிளகு ரூ.480லிருந்து ரூ.420 ஆகவும், ஏலக்காய் ரூ.1200லிருந்து ரூ.900க்கும், சவ்வரிசி ரூ.70லிருந்து ரூ.45 ஆகவும் மஞ்சள் ரூ.110லிருந்து ரூ.70 ஆகவும், கொத்தமல்லி ரூ.70லிருந்து ரூ.50 ஆகவும் குறைந்துள்ளது.












Click it and Unblock the Notifications