குடியரசுத் தலைவர் தேர்தலில் சங்மாவுக்கு பாஜக ஆதரவு- என்.டி.ஏ.-இல் கருத்து ஒற்றுமை இல்லை: சுஷ்மா

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சுஷ்மா ஸ்வராஜ் கூறியதாவது:
குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்து ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியானது வேட்பாளரை அறிவிக்கும் முன்பே எங்களுடன் ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும். ஆரோக்கியமான அந்த நடைமுறையைக் கடைபிடிக்கவில்லை.
எங்களைப் பொறுத்தவரை ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளரான பிரணாப் முகர்ஜியை அவ்வளவு எளிதில் வெற்றிபெற விடமுடியாது. நிச்சயம் கடுமையான போட்டியை உருவாக்குவோம்.
எங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தளமும் சிவசேனாவும் பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவாக இருப்பதால் கூட்டணியில் ஒருமித்த கருத்து ஏற்படுத்தப்படவில்லை.
இதனால் பாரதிய ஜனதா கட்சியானது அதிமுக, பிஜூ ஜனதா தளம் முன்னிறுத்தியுள்ள மக்களவை முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மாவை ஆதரிக்க முடிவு செய்துள்ளது. பாஜகவுடன் சிரோன்மணி அகாலி தளமும் சங்மாவை ஆதரிக்கும். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகளும் எங்களது முடிவை ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இந்த விவகாரத்தால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பிளவு ஏற்படாது என்றார் அவர்.
-
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்!











Click it and Unblock the Notifications