புதுக்கோட்டை எஸ்.பி.யாக ஆர்.தமிழ்சந்திரன் மீண்டும் நியமனம்: தமிழக அரசு உத்தரவு
சென்னை: புதுக்கோட்டை இடைத் தேர்தலின் போது மாற்றம் செய்யப்பட்ட ஆர்.தமிழ்ச்சந்திரனை மீண்டும் புதுக்கோட்டை எஸ்.பி.யாக தமிழக அரசு நியமித்துள்ளது.
புதுக்கோட்டை இடைத் தேர்தல் கடந்த 12 ம் தேதி நடைபெற்றது. தேர்தலையொட்டி புதுக்கோட்டை எஸ்.பி.யாக இருந்த ஆர். தமிழ்ச்சந்திரனை மாற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதையடுத்து கடந்த மாதம் 24ம தேதி தமிழ்ச்சந்திரன் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். சென்னை அடையாறு போலீஸ் துணை கமிஷனர் சுதாகர் புதுக்கோட்டை எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டார்.
தற்போது தேர்தல் முடிந்து புதுக்கோட்டை எம்.எல்.ஏ.வாக அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் பதவியும் ஏற்றுவிட்டார். இந்நிலையில் தேர்தலுக்காக புதுக்கோட்டை எஸ்.பி.யாக நியமிக்கப்பட்ட சுதாகர் மீண்டும் சென்னை அடையாறு துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார். மேலும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த ஆர். தமிழ்சந்திரன் மீண்டும் புதுக்கோட்டை எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து உள்துறை முதன்மை செயலாளர் ராஜகோபால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
புதுக்கோட்டை எஸ்.பி.யாக இருந்த சுதாகர், சென்னை பெருநகர, அடையாறு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த தமிழ்ச்சந்திரன், புதுக்கோட்டை எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டார் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications