சந்திரனை சுற்றிப் பார்க்கலாம்னு நினைக்கிறீங்க... ரூ700 கட்டினால் போகலாம்
Subscribe to Oneindia Tamil

சர்வதேவ விண்வெளி மையத்துக்கு சுற்றுலா சென்று வரும் காலம் தொடங்கிவிட்டது. லண்டனைச் சேர்ந்த Excalibur Almaz என்ற நிறுவனம் சர்வதேச விண்வெளி மையத்தைத் தாண்டி சந்திரனுக்கும் டூர் போய்வர ப்ளானை ரெடி செய்திருக்கிறது.
வரும் 2015-ம் ஆண்டு முதல் சந்திரனுக்கான டூர் தொடங்குகிறது. இதற்கான செலவு .. "ரொம்ப அதிகமில்லை" ரூ700 கோடிதானாம்!!
இதற்காக ரஷியாவிடம் இருந்து 6 சிறப்பு விண்கலங்கள் கூட வாங்கப்பட்டுவிட்டன. இதில் ஒரு விண்கலத்தில் 3 பேர் மட்டுமே பயணிக்க முடியும் என்கின்றனர்.
பூமியில் இருந்து 3 லட்சத்து 76 ஆயிரத்து 586.5 கி.மீட்டர் தூரம் சென்று திரும்பும் வகையிலான இத்திட்டம் தொடர்பாக நேற்று லண்டனில் செயல்முறை விளக்கம் காண்பிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications