For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மூவரின் தூக்கை ரத்து செய்வதாக பிரணாப் உறுதியளித்த பிறகு ஆதரியுங்களேன்.: திமுகவுக்கு சீமான் அட்வைஸ்

By Mathi
Google Oneindia Tamil News

Seeman
ராமேஸ்வரம்: ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனையை எதிர்நோக்கி இருக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது தூக்கை ரத்து செய்வேன் என்று பிரணாப் முகர்ஜி உறுதி அளித்தால் குடியரசுத் தலைவர் தேர்தலில் அவரை திமுகவும் விடுதலைச் சிறுத்தைகளும் ஆதரிக்கலாம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துத் தெரிவித்துள்ளார்.

ராமேஸ்வரம் பொதுக்கூட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக சீமான், அமீர் ஆகியோர் மீது வழக்கு போடப்பட்டிருந்தது. அது தொடர்பாக இன்று ராமநாதபுரம் நீதிமன்றத்தில் இருவரும் ஆஜராகினர். இந்த வழக்கில் மீண்டும் ஜூலை 20ம் தேதி இருவரும் ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

நீதிமன்றத்தில் ஆஜரான பின்னர் இருவரும் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

குடியரசுத் தலைவர் தேர்தலில் திமுகவும், திருமாவளவனும் பழங்குடி இனத்தவரான சங்மாவுக்கு ஆதரவு தரவேண்டும். பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு அளிப்பது தமிழர்களுக்கு இழைக்கும் துரோகம். அப்படி இல்லாவிடில், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்வேன் என்ற உறுதிமொழியின் பேரில் வேண்டுமானால் ஆதரவு அளிக்கட்டும்.

இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படை பிடித்தால் அவர்களுக்கு 20 ஆண்டுகள் வரை சிறை அளிக்கும் வகையில் ராஜபக்சே பேசியிருக்கிறார். அப்படி இந்திய எல்லைக்கு வந்து கைதாகும் இலங்கை மீனவர்களையும் 20 ஆண்டுகள் சிறையில் அடைக்கும்படி நாங்கள் கூறினால் அது இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக வழக்கு போடுவார்கள் என்றனர்.

English summary
Naam Thamhizar Party leader Seeman told reporters DMK and VCK don't support Pranab Mukherjee in Presidential poll.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X