For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொருளாதார வீழ்ச்சியை தடுக்க புதிய வழிகளை திங்கள்கிழமை அறிவிக்கிறோம்! - பிரணாப்

By Shankar
Google Oneindia Tamil News

Pranabh mukherjee
டெல்லி: வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தை சீர்தூக்கி முன்னேற்றம் கொண்டுவரும் வழி வகைகளை திங்கள்கிழமையன்று மத்திய அரசு அறிவிக்கும் என நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கியுடன் ஆலோசித்து சந்தைப் பொருளாதாரம் வளர்ச்சியடைவதற்கான வழிகளை முன்வைக்கப் போவதாக அவர் கூறினார்.

குடியரசுத்தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்யும் முன் தன் சொந்த மாநிலமான மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவுக்கு வந்தார். அங்கிருந்து தன் சொந்த கிராமத்துக்கு செல்லும் முன் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

நாங்கள் சில விஷயங்களை அளவெடுத்திருக்கிறோம். சந்தைப் பொருளாதாரம் வளர்ச்சியடைய வழிகளை திங்கட்கிழமையன்று அறிவிக்கிறோம்.

மத்திய ரிசர்வ் வங்கியுடன் கலந்தாலோசித்து இந்த வழிகளை அறிவிக்க உள்ளோம்.

தற்போது மொத்த கொள்முதல் அளவு 6.5 சதவிகிதமாக உள்ளது. ரூபாயின் மதிப்பும் குறைந்து வருகிறது. இந்தியப் பொருளாதாரம் பலவீனமாக உள்ளது என்பதை மறுக்க முடியாது.

உலகமே பொருளாதார வீழ்ச்சியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. இந்தியா இந்த வீழ்ச்சியிலிருந்து மீண்டு பொருளாதாரத்தில் முன்னேறும் என்ற நம்பிக்கை உள்ளது," என்றார் பிரணாப் முகர்ஜி.

கடந்த ஒரே ஆண்டில் மட்டும் இந்திய ரூபாய் மதிப்பு 20 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ 57 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Government will announce on Monday measures to improve market conditions, Finance Minister Pranab Mukherjee disclosed in Kolkata today.
 
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X