For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குடியரசுத் தலைவர் தேர்தல்: பிரணாப் முகர்ஜிக்கு பிரியாவிடை கொடுத்து வழியனுப்பியது காங்கிரஸ் செயற்குழு

By Mathi
Google Oneindia Tamil News

Pranab Mukherjee
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் நிதி அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான பிரணாப் முகர்ஜிக்கு காங்கிரஸ் செயற்குழு இன்று பிரியாவிடை கொடுத்து வழியனுப்பியது.

டெல்லியில் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன்சிங், மத்திய அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கலந்து கொண்ட காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டம், குடியரசுத் தலைவர் வேட்பாளரான பிரணாப் முகர்ஜிக்கு பிரியாவிடை கொடுப்பதற்காக கூட்டப்பட்டது. இந்த செயற்குழுவில் பேசிய சோனியா, மன்மோகன்சிங் உள்ளிட்ட அனைவரும் பிரணாப்தான் குடியரசுத் தலைவர் பதவிக்கு தகுதியானவர் என்றும் அவரது கட்சிப் பணிகளை புகழ்ந்தும் புகழாரம் சூட்டிப் பேசினர்.

காங்கிரஸ் கட்சியின் செயற்குழு உறுப்பினராக இத்தனை ஆண்டுகாலம் பணியாற்றிய தமக்கு ஒத்துழைப்பு கொடுத்ததற்கான அனைவருக்கும் பிரணாப் முகர்ஜியும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி, நிதி அமைச்சர் பதவி மற்றும் மக்களவை உறுப்பினர் பதவி ஆகிய அனைத்தையும் ராஜினாமா செய்துவிட்டு குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுவை பிரணாப் தாக்கல் செய்ய உள்ளார்.

English summary
The Congress Working Committee convened a special meeting on Monday to bid farewell to veteran party leader and presidential candidate Pranab Mukherjee.
 Emerging from the meeting, Pranab Mukherjee thanked the party and said that it was an emotional day for him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X