For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆமா...நான் பாகிஸ்தானுக்கு உளவு பார்க்கத்தான் போனேன்: விடுதலையான சுர்ஜித்சிங் பேட்டி

By Mathi
Google Oneindia Tamil News

Surjeet Singh
அட்டாரி: பாகிஸ்தானுக்கு தாம் உளவு பார்க்கவே சென்றதாக 30ஆண்டுகால சிறைவாசத்துக்குப் பின் நாடு திரும்பிய சுர்ஜித்சிங் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானால் விடுவிக்கப்பட்டு இன்று இந்தியா வந்து சேர்ந்த சுர்ஜித்சிங் அட்டாரியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

30 ஆண்டுகளுக்குப் பிறகு நான் எனது குடும்பத்தினரையும் குழந்தைகளையும் சந்திப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பாகிஸ்தான் சிறைகளில் இந்திய கைதிகள் நல்ல முறையில் நடத்தப்படுகின்றனர். சரப்ஜித்சிங்கும் கூட நன்றாகத்தான் இருக்கிறார். அவரிடம் இருந்து எனக்கு எந்த செய்தியும் வரவில்லை. அவருடைய விடுதலைக்காக நிச்சயம் குரல் கொடுப்பேன். வாரம் ஒரு முறை சரப்ஜித்சிங்கை சந்தித்துப் பேசினேன். அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

அவரது விடுதலைக்கான நடவடிக்கைகளை நான் மேற்கொள்வேன். அது எப்படி என்பது பின்னர்தான் தெரியவரும் என்றார்.

இச்சந்திப்பின் போது நீங்கள் எதற்காக எல்லை கடந்து பாகிஸ்தானுக்கு சென்றீர்கள்? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சுர்ஜித்சிங், ஆமாம்.. நான் உளவு பார்க்கத்தான் அங்கு சென்றேன்" என்றார்.

English summary
After 30 years of incarceration in Pakistan on charges of being a spy, Surjeet Singh returned home on Thursday to a tumultuous and teary welcome from family and friends. When asked why he crossed over to Pakistan, he said, "Yes, I went there for spying."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X