சதானந்த கவுடாவை மாற்றலாம்தான்.. ஆனால் வாக்குகள் பறிபோகுமோ?: யோசிக்கும் பாஜக
பெங்களூர்: கர்நாடக ஆளும் பாஜகவுக்கு நீண்டகால குடைச்சலாக இருக்கும் எதியூரப்பாவின் கோரிக்கையை ஏற்று முதல்வர் சதனானந்த கவுடாவை பாஜக மேலிடம் மாற்றக் கூடும் எனத் தெரிகிறது. ஆனால் அதே நேரத்தில் சதானந்த கவுடாவுக்கு மாற்றாக யாரை நியமிப்பது என்பது தொடர்பாக தீவிர யோசனையில் அக்கட்சி இறங்கியிருக்கிறது.
கர்நாடகத்தில் எதியூரப்பாதான் சதானந்த கவுடாவுக்கு எதிராக இருந்து வந்தார். அப்போதெல்லாம் ஜெகதீஷ் ஷெட்டர் சதானந்த கவுடா முகாமில்தான் இருந்து வந்தார். ஆனால் எதியூரப்பா, லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்தவர். ஜெகதீஷ் ஷெட்டரும் அதே சமூகத்தைச் சேர்ந்தவர். இந்த லாபியை எதியூரப்பா முடுக்கிவிட்டதால் ஜெகதீஷ் ஷெட்டர் இப்போது எதியூரப்பா பக்கம் சாய்ந்துவிட்டார். இருப்பினும் எதியூரப்பா முகாமில் இருப்பவர்கள் அனைவருமே லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்றும் கூறிவிட முடியாது.
சதானந்த கவுடா, ஒக்கலிகர் சமூகத்தைச் சேர்ந்தவர். மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவரான தேவ கவுடாவும் ஒக்கலிகர் சமூகத்தைச் சேர்ந்தவர். இதனால் சதானந்த கவுடா, தேவ கவுடாவுடன் இணைந்து செயல்படுவதாக எதியூரப்பா தரப்பு குற்றம்சாட்டி வருகிறது. இதேபோல் சதானந்த கவுடாவை மாற்றுவதற்கு மதச்சார்பறற ஜனதா தளம் பகிரங்மாகவே எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் சதானந்த கவுடாவை மாற்றிவிட்டு ஜெகதீஷ் ஷெட்டரை புதிய முதல்வராக்க வேண்டும் என்ற எதியூரப்பா முகாமின் கோரிக்கை உச்சகட்டத்தை அடைந்தது. இதனால் ஒரு முடிவு எடுக்க வேண்டிய நிலைக்கு பாஜக மேலிடம் தள்ளப்பட்டது. சதானந்த கவுடாவை மாற்றிவிட்டால் நிச்சயமாக ஒக்கலிகர் சமூகத்தின் வாக்குகளை மதச்சார்பற்ற ஜனதா தளமும் காங்கிரசும் பங்கு போட வாய்ப்பிருக்கிறது. மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு தேவ கவுடா, காங்கிரசின் ஒக்கலிகர் முகமாக எஸ்.எம்.கிருஷ்ணா இறங்கினால் தமது வாக்குகளுக்கு பங்கம் வந்துவிடும் என்று கருதுகிறது பாஜக. சதானந்தா கவுடாவை மாற்றிவிடலாம்.. அதே நேரத்தில் ஒக்கலிகர் வாக்குகளை தக்க வைக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் இப்போதைய கணக்காக இருக்கிறது. வரும் 16-ந் தேதி கர்நாடக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. அதற்கு முன்னதாக எப்படியும் முதல்வரை மாற்றிவிடுமோம் என்று கூறித்தான் எதியூரப்பாவிடம் சமாதானம் பேசியிருக்கும் பாஜக மேலிடம் புதிய முதல்வரை தேர்வு செய்வது தொடர்பாக மண்டையை பிய்த்துக் கொண்டு நிற்கிறது.
-
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பிராமணர்களுக்கு வாய்ப்பில்லை.. கர்நாடகா புதிய அமைச்சர்களில் யார் யார் எந்த ஜாதி? வென்ற சித்தராமையா -
கார்கே மகன் - சித்தராமையாவின் மகனுக்கு இடம்.. கர்நாடகாவின் புதிய அமைச்சர்கள் யார் யார்? முழு லிஸ்ட் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட்











Click it and Unblock the Notifications