தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் திடீர் தீ: மின் உற்பத்தி பாதிக்காது
தூத்துக்குடி: தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் இன்று காலை திடீர் என்று தீ விபத்து ஏற்பட்டது. இதனால் மின் உற்பத்தியில் எந்தவித பாதிப்பும் இருக்காது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடியில் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட அனல் மின் நிலையம் உள்ளது. துறைமுகப் பகுதியில் உள்ள இந்த அனல் மின் நிலையத்தில் 2 கன்வேயர் மூலம் நிலக்கரி கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் 2வது கன்வேயரில் இன்று காலை திடீர் என்று தீ விபத்து ஏற்பட்டது.
ரப்பரால் ஆன இந்த கன்வேயர் பெல்ட்டில் வேகமாகத் தீ பரவியது. உடனே இது குறித்து தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் 30 நிமிடங்கள் போராடி தீயை அணைத்தனர். இதையடுத்து கன்வேயரை சரிசெய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த பணி 3 நாட்களில் முடியும் என்று கூறப்படுகிறது. முதலாவது கன்வேயரில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதால் மின் உற்பத்தியில் பாதிப்பு இருக்காது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications