அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்த அகில் கோகய் மீது கடும் தாக்குதல்- மருத்துவமனையில் அனுமதி
Subscribe to Oneindia Tamil
நல்பாரி: சமூக சேவகர் அன்னா ஹசாரே குழுவில் இடம்பெற்றுள்ள அகில் கோகய் மீது அசாம் மாநிலத்தில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அகில் கோகய் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அசாமில் கடுமையான வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை அகில் கோகய் பார்வையிட்டு வந்தார். நல்பாரி மாவட்டம் தர்மாபூர் பகுதிக்கு சென்ற போது இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தடிகளாலும் கூர்மையான ஆயுதங்களாலும் அவரை சராமரியாகத் தாக்கியுள்ளனர்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த அகில் நல்பாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆபத்தான நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக 6 காங்கிரஸ் நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications