கர்நாடக புதிய முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர்: நிதின் கத்காரி அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil

சதானந்த கவுடா ராஜினாமா கடிதத்தைக் கொடுத்த பிறகு டெல்லியில் செய்தியாளர்களிடம் நிதின் கத்காரி கூறியதாவது:
கர்நாடக மாநிலத்தில் முதல்வர் பதவியில் இருந்து சதானந்த கவுடா ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவை பாஜக ஏற்றுக் கொண்டுள்ளது. கர்நாடக மாநிலத்தின் புதிய முதல்வராக ஜெகதீஷ் ஷெட்டரை நியமிக்க கட்சி முடிவு செய்துள்ளது. கர்நாடகத்தில் சிறப்பான ஆட்சி நடத்தி கட்சியின் பெயரைக் காப்பாற்றியவர் சதானந்தா என்றார் அவர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய சதானந்த கவுடா, கட்சியின் நலனுக்காகவே தாம் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்திருப்பதாகக் கூறினார்.












Click it and Unblock the Notifications