இளம்பெண்ணுடன் ஓடிய கணவனை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த மனைவி!

Subscribe to Oneindia Tamil

மயிலாடுதுறை: மாயிலாடுதுறையில் இளம்பெண்ணுடன் தலைமறைவான மினி பஸ் ஓட்டுநரை தேடி கண்டுபிடித்து, போலீசாரிடம் ஒப்படைந்தார் அவரது மனைவி. இந்த சம்பவம் அப்பகுதியி்ல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை அடுத்த கூறைநாட்டை சேர்ந்தவர் ரமேஷ்(40). மினி பஸ் ஓட்டுநரான இவருக்கு, கவிதா(35) என்ற மனைவியும், 2 மகளும், ஒரு மகனும் உள்ளனர். ரமேஷூக்கும், கவிதாவுக்கும் திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது.

இந்த நிலையில் ரமேஷ் கும்பகோணத்தில் மினி பஸ் ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். அப்போது ரமேஷூக்கு, தாராசுரம் பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இவர்களின் பழக்கம் அதிகமாகி, கடந்த 20 நாட்களுக்கு முன்பு இருவரும் கும்பகோணத்தில் இருந்து தலைமறைவாகிவிட்டனர்.

இது குறித்து இளம்பெண்ணின் தந்தை, கும்பகோணம் தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் கவிதாவும், கும்பகோணத்தில் தனது கணவனை தேடி அலைந்தார். செல்போன் மூலம் ரமேஷை தொடர்பு கொண்ட போலீசார், இருவரையும் அழைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் கும்கோணத்திற்கு பஸ்சில் வந்த கவிதா, கும்பகோணம் ரயில் நிலையத்தின் அருகே உள்ள சாலையில், ரமேஷ் இளம்பெண்ணுடன் நடந்து செல்வதை கண்டார். உடனடியாக பஸ்சில் இருந்து இறங்கி சென்ற கவிதா, கணவனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மேலும் தனது உறவினர்களை போனில் அழைத்து தகவல் தெரிவித்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கவிதாவின் உறவினர், ரமேஷை அடித்து உதைத்தனர். இதை கண்ட அவ்வழியாக ரோந்து சென்ற போலீசார், சண்டையை கலைத்துவிட்டு ரமேஷ், கவிதா மற்றும் அவரது உறவினர்களை கும்பகோணம் மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

போலீசார் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி, இளம்பெண்ணை அவரது பெற்றோரிடமும், கவிதாவிடம் கணவன் ரமேஷையும் ஒப்படைத்தனர். விறுவிறுப்பான சாலையில் கணவனை உறவினர்களுடன் சேர்ந்து கவிதா அடித்து உதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+