முட்டை விலை சரிவு: 5 நாட்களில் 33 காசுகள் சரிவு
Subscribe to Oneindia Tamil

கடந்த சில நாட்களாக நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை அதிகரித்துக் கொண்டே போனது. இந்நிலையில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று நடந்தது. அந்த கூட்டத்தில் முட்டை கொள்முதல் விலையை 5 காசுகள் குறைப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து முட்டை விலை ரூ.3க குறைந்துள்ளது.
மேலும் முட்டைக்கோழி கிலோ ரூ.40க்கும், கறிக்கோழி கிலோ ரூ.58க்கும் விற்கப்படுகிறது.
விலை உயர்ந்து கொண்டே போனதால் முட்டை விற்பனை குறைந்தது. இதையடுத்து விற்பனையை அதிகரி்ககும் நோக்கத்தோடு தான் முட்டை விலை குறைக்கப்பட்டுள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர். முட்டை விலை கடந்த 5 நாட்களில் மட்டும் 33 காசுகள் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications