ஜனாதிபதி தேர்தல் புறக்கணிப்பு: தேமுதிகவுக்கு எதிரான மனு ஹைகோர்ட்டில் தள்ளுபடி
சென்னை : குடியரசுத்தலைவர் தேர்தலை புறக்கணிக்கும் அரசியல் கட்சிகள் செயலை சட்ட விரோதம் என்று அறிவிக்க கோரிய பொதுநல மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னையை சேர்ந்த ஏ.பி.ஜெயராமன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கூறி இருப்பதாவது:-
குடியரசுத்தலைவர் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த 19-ந்தேதி அறிவித்து இருந்தார். இதேபோல இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் மாநில செயற்குழுவும் குடியரசுத்தலைவர் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளது. இந்த இரு கட்சிகளும் சட்டப்பூர்வ கடமையாற்றுவதில் இருந்து தவறி உள்ளன.
தே.மு.தி.க.வுக்கு 29 எம்.எல்.ஏ.க்களும், இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு 8 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். குடியரசுத்தலைவர் தேர்தலை புறக்கணிக்கும் அவர்களது செயலை சட்ட விரோதம் என்று அறிவிக்க வேண்டும். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க மத்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறினர். மேலும் அந்த பொதுநலமனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தர விட்டனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications