ஆஸ்திரேலியா செல்ல முயற்சி: திருகோணமலையில் 101 தமிழர்கள், 8 சிங்களவர் கைது
திருகோணமலை: படகு மூலம் ஆஸ்திரேலியா செல்ல முயன்றதாக 100க்கும் மேற்பட்ட தமிழர்கள் திருகோணமலை கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலை கடற்பரப்பில் சிறிய மீன்பிடி படகில் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று ஆஸ்திரேலியா நோக்கி சென்று கொண்டிருந்தனர். அவர்களை வழிமறித்த இலங்கை கடற்படை அனைவரையும் கைது செய்தது. கைது செய்யப்பட்ட அனைவரும் துறைமுகத்துக்குக் கொண்டுவரப்பட்டனர். அவர்களிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
திருகோணமலையில் கைது செய்யப்பட்டோரில் 101 பேர் தமிழர்கள். 8 பேர் சிங்களவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைக்காலமாக இலங்கையிலிருந்து தப்பி ஆஸ்திரேலியாவுக்கு படகு மூலம் தஞ்சமடைய செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அப்படிச் செல்ல முயன்றோர் கைது செய்யப்படுவதும் தொடர் கதையாக இருந்து வருகிறது.
ஜூலை 13-ந் தேதியன்று திருகோணமலை கடற்பரப்பில் 41 பேர் கைது செயப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications