செப்டம்பருக்கு பிறகு காங்கிரஸை எப்படியும் ராகுல் 'நிமித்திடுவார்': திக்விஜய் சிங் நம்பிக்கை
Subscribe to Oneindia Tamil

இது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு திக்விஜய்சிங் அளித்துள்ள பேட்டியில் கூறப்பட்டுள்ளதாவது:
காங்கிரஸ் கட்சிக்கான ராகுல் காந்தியின் பங்களிப்பு நிச்சயம் தற்போதைய நிலைமையைவிட கூடுதலாகவே இருக்கும். குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் முடியட்டும். செப்டம்பர் மாதம் வரை பொறுத்திருங்கள். அதற்குப் பிறகு எல்லாம் தெளிவாகத் தெரிந்துவிடும்.
அவரை முன்னரே முக்கிய பொறுப்புகளுக்கு கொண்டுவந்திருந்தால் ஊடகங்கள் விமர்சிக்கும். ஆனால் கட்சியில் ராகுலின் பங்களிப்புக்கான தேவை உருவாகியுள்ளது. இதுவே சரியான தருணம்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அனைவருமே ராகுலின் கூடுதல் பங்களிப்பையே எதிர்பார்க்கின்றனர். விரும்புகின்றனர். கட்சியினரின் கருத்தையே சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித்தும் வெளிப்படுத்தியிருந்தார் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications