தீக்குளித்த இஸ்ரேலியர்.. படுகாயமடைந்த நிலையில் குச்சி ஐஸ் சாப்பிட்ட வினோதம்!!
சமூக சீர்திருத்தத்தை வலியுறுத்தி இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகரில் நடந்த பேரணியில் கலந்து கொண்ட ஒருவர் திடீரென தீக்குளித்தார். தீயில் கருகி துடித்த அவரை பேரணியில் கலந்து கொண்டவர்கள் கடுமையாக போராடி தீயை அணைத்தனர். அதன் பின்னர் அவர் குச்சி ஐஸை வாங்கி சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.
அந்த வினோத நபரின் பெயர் மோஷே சில்மான். 57 வயதாகும் இவர் டெல் அவிவ் நகரில் நடந்த பேரணியில் கலந்து கொண்டார். அதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சமூக சீர்திருத்தத்தை வலியுறுத்தி இப்பேரணி நடந்தது.
பேரணியின்போது திடீரென தீக்குளித்து விட்டார் மோஷே. தனது உடல் மீது பெட்ரோல் ஊற்றி பற்ற வைத்துக் கொண்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் கடுமையாக போராடி தீயை அணைத்தனர். அவர் மீது தண்ணீரை ஊற்றி உட்கார வைத்தனர். பின்னர் அவருக்கு குச்சி ஐஸைக் கொடுத்தனர். அதை வாங்கி நிதானமாக சாப்பிட்டார் மோஷே.
அதன் பின்னர் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், 80 சதவீத அளவுக்கு உடலில் தீக்காயம் ஏற்பட்டிருப்பதாக கூறினர். இதனால் தற்போது ஆபத்தான நிலையில் மோஷே சிகிச்சை பெற்று வருகிறார்.
மோஷே தீக்குளித்தது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நதாயன்ஹு கவலை தெரிவித்துள்ளார். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துவதாக அவர் கூறியுள்ளார்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications