மோடி குறித்து அம்பிகா சோனி விமர்சிப்பது சரியா?- கிஷோர் திரிவேதி

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தனது மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக பல நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்கிறார். ஒரு முதல்வராக அது அவருடைய கடமை என்றாலும், அவருடைய முயற்சி பிற மாநிலங்களின் வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது என்று மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி தெரிவித்துள்ளார்.
ஆனால் அவர் கூறுவது முற்றிலும் தவறு. மோடி ஒரு நாளும் அடுத்த மாநிலத்தின் வளர்ச்சி பாதிக்கும் வகையில் செயல்பட்டதில்லை. குஜராத்தில் உள்ள குழந்தைகளில் 80 சதவீதம் பேர் ஊட்டச்சத்துகுறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக இதே அம்பிகா சோனி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தெரிவித்தார். தற்போது மோடி முதலீடு குறித்த கருத்தரங்கில் கலந்து கொள்ள ஜப்பான் சென்றுள்ளார். அவர் டோக்கியோவில் உள்ள நரிடா விமான நிலையத்தில் இறங்கியபோது அவருக்கு ஜப்பான் அரசு ராஜ வரவேற்பு அளித்தது.
அங்கு சர்வேதச செய்தியாளர்கள் மோடியை சந்தித்து பிரதமர் வேட்பாளர், 2014ம் ஆண்டு நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவின் வெற்றி உள்பட பல்வேறு விவகராங்கள் குறித்து கேட்டனர். அப்போது மானேசரில் உள்ள மாருதி தொழிற்சாலையில் ஏற்பட்ட கலவரம் குறித்தும் கேட்டனர்.
அதற்கு மோடி கூறுகையில்,
இது போன்ற சம்பவம் உலகின் எந்த பகுதியி்லும் நடக்கக் கூடாது. அது எங்கு நடந்தது என்பது பிரச்சனை அல்ல. மனித உயிரின் பாதுகாப்பு தான் முக்கியமான விஷயம் ஆகும். இந்த விவகாரத்தை ஹரியானா அரசு (காங்கிரஸ் அரசு) முறையாக கையாளும் என்று நினைக்கிறேன். அது கையாளும் என்றார்.
ஜப்பானில் பேசிய மோடி குஜராத்தின் சிஇஓவாக பேசவில்லை. இந்தியாவின் பிரதிநிதியாகத் தான் பேசினார்.
சோனி குஜராத்தில் வறுமையைப் பற்றி பேசினார். இந்நிலையில் சீனாவுக்கான இந்திய தூதர் ஒரு கண்காட்சியை துவக்கி வைக்கச் சென்றார். அங்கு பார்த்தால் இந்தியா கடும் வறுமையில் இருப்பது போன்று சித்தரித்துள்ளனர். முதலில் தேசம் பிறகு மாநிலம் என்று சோனி தானே கூறினார். அப்படி என்றால் அந்த கண்காட்சிக்கு இந்திய தூதரை அனுப்பி அரசு தவறு செய்துவிட்டதா? என்று கேட்கத் தோன்றுகிறது.
(கட்டுரை: கிஷோர் திரிவேதி)
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications