நாடாளுமன்றத்தில் பிரதீபா பட்டீலுக்கு உற்சாக வழியனுப்பு விழா- காணாமல்போன எம்.பிக்கள்

நாட்டின் 12-வது குடியரசுத் தலைவரான பிரதீபா பட்டீலின் பதவிக் காலம் இன்றுடன் முடிவடைகிறது. இதையொட்டி அவர் இன்று இரவு 7 மணிக்கு நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றுகிறார். அகில இந்திய வானொலி நிலையங்களும் அவருடைய உரையை ஒலிபரப்ப உள்ளன.
முன்னதாக நேற்று நாடாளுமன்ற மத்திய மண்டபத்தில் எம்.பிக்கள் சார்பில் உற்சாக வழியனுப்பு விழா நடைபெற்றது.
மக்களவை சபாநாயகர் மீரா குமார், குடிய்ரசு துணைத் தலைவரும் மாநிலங்களவை தலைவருமான ஹமீத் அன்சாரி, பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பிரதீபா பட்டீலுக்கு நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் பேசிய மக்களவை சாபாநாயகர் மீராகுமார், மராட்டிய மாநிலத்தில் எம்.எல்.ஏ.வாக பொது வாழ்க்கையை தொடங்கி நாட்டின் முதல் பெண் குடியரசுத் தலைவராக பதவி ஏற்றதன் மூலம் வரலாறு படைத்து இருக்கிறார் பிரதீபா பட்டீல் என்றார்.
வாழ்த்துகளை ஏற்று பேசிய பிரதீப் பட்டீல், நாடாளுமன்ற அமளிகளை மறைமுகமாகக் குறிப்பிட்டு நாடாளுமன்றத்தில் வரலாற்று சிறப்புமிக்க வாதங்களுக்கு இடமளிக்கப்பட வேண்டும் என்றார்.
நாட்டின் குடியரசுத் தலைவர் பொறுப்பில் இருப்பவருக்கு நடத்தப்பட்ட வழியனுப்பும் விழாவிலும் கூட ஏகப்பட்ட எம்.பிக்கள் ஆப்சென்ட் ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்றத்தில் சோனியாவுக்கு அருகில் எப்போதும் பிரணாப் முகர்ஜிதான் அமர்ந்திருப்பார். தற்போது அந்த இடத்தில் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் பவன்குமார் பன்சால் அமர்ந்திருந்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications