இனமோதலால் பாதிக்கப்பட்டுள்ள அசாமுக்கு ரூ300 கோடி உதவி: பிரதமர் மன்மோகன்சிங் அறிவிப்பு
குவஹாத்தி: இனமோதலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் அசாம் மாநிலத்துக்கு ரூ300 கோடி நிவாரண உதவி வழங்கப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.
அசாமில் வன்முறை பாதித்த கோக்ராஜர் மாவட்டத்தில் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளோரை பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் இன்று நேரில் சந்தித்து நிலைமைகளைக் கேட்டறிந்தனர். மேலும் மோதல் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் மாநில அரசுடன் இணைந்து மத்திய அரசு தொடர்ந்து செயல்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
வன்முறையால் பாதிக்கப்பட்ட அசாம் மாநிலத்துக்கு ரூ300 கோடி நிவாரண உதவி வழங்கப்படும் என்று கூறிய மன்மோகன்சிங், இனமோதலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலாரூ2 லட்சம் வழங்கப்படும் என்றார். இம்மோதலில் படுகாயமடைந்தோருக்கு தலா ரூ50 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக அசாம் தலைநகர் குவஹாத்தியில் இருந்து பிரதமர் மன்மோகன்சிங் சென்ற ஹெலிகாப்டரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் அவர் மீண்டும் குவஹாத்தி திரும்ப நேரிட்டது. பின்னர் வேறு ஒரு ஹெலிகாப்டரில் வன்முறை பாதித்த கோக்ராஜர் மாவட்ட முகாம்களுக்கு சென்று பார்வையிட்டார்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications