தென்சீனக் கடல் விவகாரத்தில் நடத்தை விதிகள் அவசியம்: இந்தோனேசியா வலியுறுத்தல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தென்சீனக் கடல் விவகாரத்தில் சீனாவுக்கும் ஆசியான் நாடுகளுக்கும் இடையே நடத்தை விதிகளை உருவாக்க வேண்டும் என்று இந்தோனேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் மார்ட்டி நடாலிகா வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணமாக வந்துள்ள இந்தோனேசிய அமைச்சர் நடாலிகா டெல்லியில் நடைபெற்ற இருநாடுகளுக்கு இடையேயான கூட்டுக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவும் இதில் கலந்து கொண்டார். இதில் முக்கியமான தென்சீனக் கடல் விவகாரம் விவாதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து டெல்லியில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் நடாலிகா பங்கேற்றார். அக்கருத்தரங்கில் பேசிய அவர், சீனாவுக்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் இடையிலான கடல் எல்லை பிரச்னை பூதாகரமாக உருவெடுத்துள்ளதுடன் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கிடையிலும் விரிசலை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், தென்சீனக் கடற்பரப்பில் "நடத்தை விதிகளை' உடனடியாக உருவாக்க வேண்டியது அவசியமாகிறது. அந்த விதிகளை நடைமுறைப்படுத்தினால் மட்டுமே அப்பகுதியில் பதற்றத்தைக் குறைக்க முடியும் என்று வலியுறுத்தினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+