நரிக்குறவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்-சிவகாமி
உத்திரமேரூர்: நரிக்குறவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து, அவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சமூக சமத்துவப்படை கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
நரிக்குறவர் சமூகம் சார்பில் உள்ஒதுக்கீடு கோரி உத்திரமேரூரில் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சமூகச் சமத்துவப் படை கட்சியின் நிறுவனத் தலைவர் சிவகாமி கலந்து கொண்டு பேசியதாவது,
நாடோடிகளாக வாழ்ந்து வரும் நரிக்குறவர்கள் வன விலங்குகளை வேட்டையாட அரசு தடை விதித்துள்ளது. இதனால் அவர்கள் பாசி, மணி, போன்றவற்றை விற்றுப் பிழைப்பு நடத்துகின்றனர். ஆனால் அதில் போதிய வருமானம் கிடைப்பதில்லை. எனவே அவர்கள் தொழில் துவங்க அரசு உதவ வேண்டும்.
விவசாயிகளுக்கு மானிய விலையில் விதை, உரம் போன்றவற்றை வழங்குவது போல், நரிக்குறவர்களுக்குப் பாசி, மணி போன்றவற்றை இலவசமாக வழங்க வேண்டும். நரிக்குறவர்கள் அதிகம் வசிக்கும் இடத்தில், அரசு உண்டு உறைவிட ஆரம்ப பள்ளியை துவக்க வேண்டும்.
அரசு இப்பணியை மேற்கொள்ளாவிட்டால், சமூகச் சமத்துவப்படை சார்பில் நரிக்குறவர்கள் அதிகம் வசிக்கும் இடத்தில் உண்டு உறைவிடப் பள்ளி துவக்கப்படும். நரிக்குறவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். மேலும் அவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும். இந்த கோரிக்கை நிறைவேறும் வரை, சமூகச் சமத்துவப்படை நரிக்குறவர்களுக்காக போராடும் என்றார்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications