நேபாளத்தில் மேலும் ஒரு விபத்து: ஆற்றுக்குள் பேருந்து கவிழ்ந்து 15 இந்தியர் பலி
Subscribe to Oneindia Tamil
காத்மண்டு: நேபாள நாட்டில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 15 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.
நேபாள நாட்டில் பால்பா மாவட்டத்தில் இந்தியர்களை ஏற்றிக் கொண்டு ருருதாம் என்ற இடத்தை நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து ஆற்றுக்குள் பாய்ந்தது. இதில் பேருந்தில் பயணித்த 9 பெண்கள், 4 குழந்தைகள், 2 ஆண்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
நேபாளத்தில் இந்து புண்ணிய தலங்களை தரிசிக்க தமிழகம் உள்ளிட்ட தென் இந்தியாவிலிருந்துதான் அதிகம் பேர் சென்று திரும்புகின்றனர்.
கடந்த 15-ந் தேதியன்று மேற்கு நேபாளத்தில் இதேபோல் நிகழ்ந்த விபத்தில் 35 பேர் உயிரிழந்தனர். இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் உயிரிழந்திருந்தனர். அளவுக்கு அதிகமாக பயணிகளை பேருந்து ஏற்றிச் செல்வதால்தான் இத்தகைய விபத்துகள் நிகழ்வதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications