வேலைவாய்ப்பு அலுலககத்தில் அமைச்சர் திடீர் ரெய்ட்: ஊழியர்கள் கூண்டோடு இடமாற்றம்

Subscribe to Oneindia Tamil

CT Chellapandian
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் செல்லப்பாண்டியன் திடீர் ஆய்வு நடத்தி, ஊழியர்கள் அனைவரையும் கூண்டோடு டிரான்ஸ்பர் செய்ய உத்தரவிட்டார்.

திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் ஜெயா நகரில் தனியார் கட்டடத்தில் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் பல ஊழியர்களுக்கு கம்ப்யூட்டரில் விவரங்களைப் பதிவு செய்யவே தெரியாது. அவர்களுக்கு கம்ப்யூட்டரை ஆன்-ஆப் மட்டுமே தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், தங்களுக்குகு கம்ப்யூட்டரில் பதிவு செய்யத் தெரியாது என்பதை மறைக்க பதிவு செய்ய வருவோரிடம் எரிந்து விழுவர். விண்ணப்பங்களில் ஏதாவது குறை இருப்பதாகக் கூறி திருப்பி அனுப்புவர், சரியான பூர்த்தி செய்துவிட்டு வந்தவர்களிடம் எதிரே உள்ள பிரவுசிங் சென்டருக்கு போகச் சொல்வர்.

அந்த சென்டரில் உள்ள நபர் வேலைவாய்ப்பு அலுவலக இணையத்தில் லாக்-இன் செய்து விவரங்களைப் பதிவு செய்துவிட்டு 100 ரூபாய் வாங்குவார். அதில் 50 ரூபாய் இந்த அலுவலக ஊழியர்களுக்கு கட்டிங்காக தரப்படும்.

இந்த அலுவலகம் குறித்து நெடு நாட்களாகவே புகார்கள் இருந்து வந்தது. அலுவலகத்தில் வேலைவாய்ப்பு பதிவை முறையாக செய்வதில்லை, ஆன்லைன் மூலம் பதிவு செய்ய மறுக்கின்றனர், வெளியே இன்டர்நெட் மையங்களுக்கு செல்லுமாறு கூறுகின்றனர். விண்ணப்பங்களை இலவசமாக தருவதில்லை என பல்வேறு புகார்கள் எழுந்தன.

இந் நிலையில் இந்த அலுவலகத்துக்கு அமைச்சர் செல்லப்பாண்டியன் திடீரென வந்தார். முதலில் பதிவு செய்ய வந்தவர்களிடம் சென்று அவர்களிடம் பேசினார். அவர்கள், இந்த வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முறையாக எதுவும் நடைபெறுவதில்லை. அனைத்துக்கும் பணம் கேட்கின்றனர் என புகார் தெரிவித்தனர். மேலும் கழிப்பறை, குடிநீர் வசதி இல்லை கூட இங்கு இல்லை என்றும் புலம்பினர்.

பின்னர் பதிவு செய்யும் இடத்துக்குச் சென்றார் அமைச்சர். அங்கு கம்ப்யூட்டரில் பதிவு செய்ய முடியாமல் ஊழியர் முழித்துக் கொண்டிருந்தார். அவருக்கு கம்ப்யூட்டரை ஆன்-ஆப் மட்டுமே தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பதிவு அட்டையில் ஒரு பெயரும், கணினியில் ஒரு பெயருமாக சிலருக்கு பதிவு செய்யப்பட்டிருந்தன.

இதையடுத்து வேலைவாய்ப்பு அலுவலக ஊழியர்களிடம் அமைச்சர் நேரடியாக விசாரணை நடத்தியதோடு, அலுவலக பதிவேடுகளை ஆய்வு செய்தார்.

எல்லாம் பெரும் குழப்படியாக இருக்கவே, அங்கிருந்தே தொலைபேசி மூலம் வேலைவாய்ப்புத்துறை செயலாளரை அழைத்து இந்த அலுவலகத்தின் அனைத்து ஊழியர்களையும் கூண்டோடு இடமாறுதல் செய்யும் உத்தரவை டைப் அடிக்கச் சொன்னார் அமைச்சர் செல்லபாண்டியன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+