சட்டசபையில் ஜெயலலிதாவை புகழவே அமைச்சர்களுக்கு நேரம்போதவில்லை: விஜயகாந்த் தாக்கு

கோவில்பட்டியில் மாவட்ட தேமுதிக சார்பில் பொதுக் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
பின்னர் விஜயகாந்த் பேசியதாவது,
மாற்று திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்க இன்றைய ஆளும் கட்சி முன்வரவில்லை. ஸ்ரீவைகுண்டம் பகுதியில் தாமிரபரணி ஆற்று தண்ணீரை தொழிற்சாலைகளுக்கு எடுத்துச் செல்கின்றனர். ஆனால் அங்குள்ள மக்களுக்கு தண்ணீர் மறுக்கப்படுகிறது. தற்போது வீட்டிற்கு மாத வாடகை ரூ.3,000 என்றால், மின்சார கட்டணமாக ரூ.3,000 கட்ட வேண்டியுள்ளது. மின்தடையால் தமிழகமே இருளில் மூழ்கி தவிக்கிறது. சங்கரன்கோவில் இடைத்தேர்தல் முடிந்து 6 மாதமாகியும் அந்த தொகுதியில் எவ்வித திட்டமும் நிறைவேற்றப்படவில்லை.
ஆசிரியர்கள் 77 பேர் ஆதி திராவிட மாணவர்களின் கல்வி உதவித்தொகை பணத்தை சுருட்டி உள்ளனர். இவ்வாறு தவறு செய்த ஆசிரியர்களை வெறும் சஸ்பெண்ட் மட்டுமே செய்யாமல், அவர்களிடம் இருந்து மோசடி பணத்தை திரும்பப் பெற்று தண்டனை வழங்க வேண்டும். தொடர் மின்தடை மற்றும் மின்கட்டண உயர்வால் விறகு அடுப்புகளை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. விலைவாசி உயர்வால் மக்கள் சிரமப்படுகின்றனர். சுதந்திரம் பெற்று 64 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் விளாத்திகுளம் பகுதியில் தார்சாலைகளை காணாத கிராமங்கள் நிறைய உள்ளன.
கோவில்பட்டியில் ஒவ்வொரு ஆட்சியின்போதும் இரண்டாவது பைப் லைன் திட்டம் நிறைவேற்றப்படும் என கூறப்படுவதோடு சரி. ஆனால் இத்திட்டம் இதுவரை நிறைவேறியபாடில்லை. சட்டசபையில் முதல்வரை புகழ்வதிலேயே அமைச்சர்கள் குறியாய் உள்ளனர். அதிமுக ஆட்சியில் தினமும் ஒரு அறிக்கை விடுகின்றனர். ஆனால் இதில் திட்டங்களை முழுமையாக நிறைவேற்றினார்களா என்றால் இல்லை.
அதிமுக ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்கள் எதுவும் நடக்கவில்லை. காவல் துறையினரே எங்கு கொள்ளையடிக்கலாம் என ஏவிவிடும் நிலை உள்ளது. காவல்துறையினர் எங்களை சீண்டினால் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம். ஜெயலலிதா மேடைகளில் பேச வரும்போது எத்தனை போலீஸ் பாதுகாப்பு. ஆனால் இங்கு பாருங்கள் ஒரு போலீஸ்காரராவது இருக்கிறாரா, வரும் நாடாளுமன்ற தேர்தலை ஒரு வடிகாலாக நினைக்கின்றனர். அதனால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் ஏமாறாமல் எச்சரிக்கையுடன் வாக்களியுங்கள் என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications