For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கேரளாவில் வெள்ளத்தால் இழுத்துச் செல்லப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உள்பட 8 பேர் பலி

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: வட கேரளாவில் கண்ணூர், கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உள்பட 8 பேர் பரிதாபமாக இறந்தனர். காணாமல் போன இரண்டு பேரை தேடும் பணி நடந்து வருகிறது.

கேராளவில் கடந்த சில வாரங்களாக ஓய்ந்திருந்த பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. அதிலும் குறிப்பாக வடகேரள மாவட்டங்களான கண்ணூர், வயநாடு, கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் இந்த 3 மாவட்ட எல்லையிலுள்ள இரிட்டி, புல்லூரான்பாறை ஆகிய பகுதிகளில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும் இப்பகுதியிலுள்ள ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

வீடுகளில் இருந்தவர்களும் வெள்ளத்தால் இழுத்துச் செல்லப்பட்டனர். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீடுகளில் பிஜு என்பவரின் வீடும் அடக்கம். வீட்டில் இருந்த பீஜுவின் தந்தை ஜோசப், தாய் ஏலி்க்குட்டி, மனைவி லிசி, மகன்கள் அமல், ராஜேஷ் ஆகியோர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்கள் 5 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. மேலும் வெள்ளத்தால் இழுத்துச் செல்லப்பட்ட கோபாலான், வார்கி மற்றும் அக்சஸ் ஆகியோரது உடல்களும் மீ்ட்கப்பட்டன. காணாமல் போன மேலும் இரண்டு பேரை தேடும் பணி நடந்து வருகிறது.

English summary
8 persons including 5 of a family were were washed away in flashfloods triggered by heavy rains in Kozhikode and Kannur districts in north Kerala.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X