சாதி, மத வேறுபாடின்றி மழை வேண்டி நாளை விகேபுரத்தில் கூட்டுப் பிரார்த்தனை
நெல்லை: பருவமழை பொய்த்துவிட்டதையடுத்து மழை வேண்டி வி.கே.புரம் பகுதியில் நாளை கூட்டு பிரார்த்தனை நடக்கிறது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை கண்ணாமூச்சி ஆடி வருகிறது. இதனால் பல பகுதிகளில் வறட்சி ஏற்பட்டுள்ளது. நீர் வரத்து குறைந்துள்ளதால் அணைகள் வரண்டு காணப்படுகின்றன. 144 அடி கொள்ளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் தற்போது 33 அடியாக உள்ளது. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. இதையடுத்து மழை வேண்டி நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பிரார்த்தனை நடந்து வருகிறது.
இந்நிலையில் விகேபுரத்தில் உள்ள அரிமா சங்கம் சார்பில் நாளை (10ம் தேதி) காலை மழைக்காக அவரவர் இருப்பிடத்திலிருந்து பிரார்த்தனை செய்யப்படுகிறது. ஒரே நேரத்தில் விகேபுரம் பகுதியிலுள்ள அனைத்து கோயில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், அலுவலகங்கள், வியாபார நிறுவனங்கள், வீடுகள் ஆகியவற்றில் ஒருமித்த கூட்டு பிரார்த்தனை நடக்கிறது.












Click it and Unblock the Notifications