For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை ஏர்போர்ட்டில் உள்ளாடைக்குள் வைத்து ரூ.1 கோடி போதைப்பொருள் கடத்த முயன்ற பெண் கைது

By Siva
Google Oneindia Tamil News

Drug Trafficking
சென்னை: சென்னையில் இருந்து குவைத் செல்லவிருந்த பெண் ஒருவர் ரூ.1 கோடி மதிப்புள்ள போதைப் பொருளுடன் விமான நிலையத்தில் சிக்கினார்.

கடந்த சனிக்கிழமை சென்னையில் இருந்து குவைத் செல்ல ஏர் இந்தியா விமானம் ஒன்று தயாராக இருந்தது. அதில் பயணிக்கவிருந்தவர்களை விமான நிலையத்தில் வைத்து பரிசோதித்தனர். அப்போது ஒரு பெண்ணை சந்தேகத்தின் பேரில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர். அந்த பெண்ணை சோதனையிட்டதில் அவரது உள்ளாடைக்குள் 54 பாக்கெட் ஹெராயின் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 961 கிராம் எடையுள்ள அந்த போதைப் பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.1 கோடி ஆகும்.

விசாரணையில் அந்த பெண்ணின் பெயர் தர்பாரி பாலகிரி என்றும், அவர் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. இதையடுத்து அவர் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

English summary
A woman air passenger flying to Kuwait was arrested in Chennai by the Central Industrial Security Force for allegedly smuggling narcotics worth Rs.1 crore. The passenger, identified as Darbari Palagiri from Andhra Pradesh, had concealed 54 packets of heroin in her undergarments when she was intercepted by the CISF at the airport on Saturday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X