அமைதி, வளம், சமத்துவம் தழைத்தோங்க உறுதியேற்போம்: ராமதாஸ் சுதந்திர தின வாழ்த்து
சென்னை: எங்கும் அமைதி, வளம், சமத்துவம், சமூகநீதி தழைத்தோங்க சுதந்திர தினத்தன்று உறுதியேற்போம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,
இந்தியாவின் 66வது விடுதலை நாள் விழா நாளை கொண்டாடப்படுவதையொட்டி நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது விடுதலை நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
விடுதலை பெற்றபின் கடந்த 65 ஆண்டுகளில் கல்வி,பொருளாதாரம், அறிவியல் உள்ளிட்ட துறைகளில் நாம் அடைந்த முன்னேற்றம் வியக்க வைக்கிறது. ஆனால் இந்த முன்னேற்றங்களின் பயன்கள் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைந்துள்ளனவா என்று கேட்டால், இல்லவே இல்லை என்பது தான் பொதுவான பதிலாக உள்ளது.
உலகின் மிகவேகமாக வளர்ந்துவரும் இரண்டாவது பெரிய பொருளாதார நாடு இந்தியா என நமக்கு நாமே புகழாரம் சூட்டிக்கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவின் கிராமப்புறங்களில் மக்களில் 10 விழுக்காட்டிற்கும மேற்பட்டோர் நாள்தோறும் 17 ரூபாய் கூட வருவாய் ஈட்ட முடியாமல் வறுமையில் வாடிக் கொண்டிக்கிறார்கள் என்ற செய்தி நமது இதயத்தில் ஈட்டியாய் பாய்கிறது. இன்னொரு புறம் கடினமாக உழைத்து ஈட்டிய பணத்தை அரசு மதுக்கடைகளில் தொலைத்துவிட்டு ஏழை தொழிலாளர்களின் குடும்பத்தினர் அனைவரும் பட்டினியில் வாடும் கொடுமையும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
இந்தியாவில் நாம் விடுதலை நாள் விழாவை கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில் இலங்கையில் உள்ள நமது சொந்தங்கள் கம்பிவேலி முகாம்களுக்குள் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் நலன்களுக்காக குரல் கொடுப்பதற்குக் கூட தடை விதிக்கபடுவதை பார்க்கும்போது நாம் பெற்ற சுதந்திரத்திற்கு மரியாதை என்ன என நமக்கு நாமே வினா எழுப்பத் தோன்றுகிறது.
இந்தியாவில் உள்ள ஏழை மக்களின் வறுமை ஒழியவும், ஈழத்தமிழர்களின் துயரங்கள் விலகவும், எங்கும் அமைதி, வளம், சமத்துவம், சமூகநீதி தழைத்தோங்கவும் இந்த நாளில் உறுதியேற்போம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications