ரூ.30 கோடி மதிப்பில் சென்னை மாநகராட்சி விரிவாக்க பகுதிகளில் 100 புதிய பூங்காக்கள்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை மாநகராட்சி விரிவாக்க செய்ய இணைக்கப்பட்ட பகுதிகளில் ரூ.30 கோடி மதிப்பிலான 100 புதிய பூங்காக்கள் அமைக்க, டெண்டர் விட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சியை விரிவாக்க செய்யும் வகையில், சுற்றிலும் உள்ள பகுதிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. இப்பகுதிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த மாநகராட்சி பட்ஜெட்டில், சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் 100 புதிய பூங்காக்கள் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ரூ.30 கோடி மதிப்பிலான 100 பூங்காக்கள் அமைக்கும் பணிகளை டெண்டர் விட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதிதாக அமைக்கப்பட உள்ள பூங்காக்களில் குழந்தைகள் விளையாட்டு சாதனங்கள், யோகா மேடை, புல் தரை, நடைபயிற்சி பாதை, செடிகள், மரங்கள் ஆகியவை அமைக்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications