ஹோட்டலில் விபச்சார விடுதி வைத்து நடத்திய முன்னாள் மிஸ் ஸ்ரீலங்கா அழகி கைது!

Subscribe to Oneindia Tamil

மொறாட்டுவா: கடந்த 1995ம் ஆண்டு மிஸ் ஸ்ரீலங்கா அழகி பட்டம் வென்ற சுமுந்திரா, தனது ஹோட்டலில் ரகசியமாக விபச்சார விடுதி நடத்தி வந்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

கடந்த 1995ம் ஆண்டு மிஸ் ஸ்ரீலங்கா அழகி பட்டம் வென்றவர் சுமுந்திரா லியானாகே. இவர் தற்போது சினிமா மற்றும் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடித்து வருகிறார். இலங்கையில் உள்ள மொறாட்டுவா பகுதியில் சொகுசு ஹோட்டல் ஒன்றை சுமுந்திரா நடத்தி வருகிறார்.

இந்த ஹோட்டலில் விபச்சார தொழில் நடைபெறுவதாக கின்ந்தார் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த விபச்சார கும்பலை கையும், களவுமாக கைது செய்ய போலீசார் நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றனர்.

அதன்பிறகு சொகுசு ஹோட்டலுக்கு போலீஸ் ஒருவரை விபச்சார வாடிக்கையாளராக அனுப்பி வைத்தனர். அங்கு உல்லாசமாக இருக்க தனக்கு ஒரு அழகி வேண்டும் என்று அவர் கேட்டுள்ளார். இதற்காக ரூ.8 ஆயிரம் பணத்தை கட்டியுள்ளார்.

இதையடுத்து வாடிக்கையாளர் வேடத்தில் வந்திருப்பது போலீஸ் என்பதை அறியாத விபச்சார கும்பல், ஒரு அழகியை அனுப்பி வைத்துள்ளனர். அப்போது சம்பவ இடத்தில் முற்றிகையிட்ட போலீசார், விடுதி ஏஜென்ட் மற்றும் இரு அழகிகளை கைது செய்யப்பட்டனர்.

போலீசாரின் முற்றுகையின் போது, ஹோட்டல் உரிமையாளரான சுமுந்திரா அங்கே இருக்கவில்லை. எனவே அவர் பின்னர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் விபச்சார விடுதியின் ஏஜெண்டாக செயல்பட்டவர், போலீஸ் துறையில் சார்ஜண்டாக பணியாற்றியவர் என்பது தெரியவந்தது.

கைது செய்யப்பட்டவர்களின் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+