For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நியூயார்க் எம்பயர் ஸ்டேட் துப்பாக்கிச் சூட்டுக்கு முன்பகைதான் காரணம்?

By Mathi
Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவில் வெள்ளிக்கிழமையன்று எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு இரு ஊழியர்களுக்கிடையேயான முன்பகையே காரணம் என்று தெரியவந்துள்ளது.

நியூயார்க் நகரில் உள்ள "எம்பயர் ஸ்டேட் கட்டடம்' முன் வெள்ளிக்கிழமை காலை மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இதைத் தொடர்ந்து போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். போலீசாரும் மர்ம நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. துப்பாக்கிச் சூடு நடத்திய நபரான்ன ஜெப்ரி ஜான்சன் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இம்மோதலில் ஸ்டீவென் எர்காலினோ என்பவரும் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த மோதலில் உயிரிழந்த இருவரும் ஹசன் ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் ஒன்றாகப் பணிபுரிந்திருக்கின்றனர். இதில் இருவருக்கும் இடையே பகை இருந்திருக்கிறது. இந்த முன்விரோதம்தான் எம்பயர் ஸ்டேட் கட்டட துப்பாக்கிச் சூட்டுக்கும் காரணமாக இருந்தது என்கின்றனர் போலீசார்.

இதனிடையே போலீசார் நடத்திய என்கவுண்டரில்தான் 9 அப்பாவிகளும் படுகாயமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

அமெரிக்காவில் மர்ம நபர்கள் துப்ப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
All nine bystanders caught in the crossfire of a shooting outside New York City's iconic Empire State Building were wounded by two police officers who had never fired their weapons on duty, authorities confirmed Saturday. Officer Craig Matthews fired seven times and Officer Robert Sinishtaj fired nine times at Jeffrey Johnson on a busy Friday morning in the highly touristed area after Johnson shot a former co-worker to death and then pointed his pistol at them.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X