For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓணம் பண்டிகை: தோவாளை பூ மார்க்கெட்டில் குவிந்த கேரள வியாபாரிகள்- காய்கறி விலை உயர்வு

By Siva
Google Oneindia Tamil News

Flowers
நாகர்கோவில்: ஓணம் பண்டிகையையொட்டி தோவாளை பூ மார்க்கெட் களைகட்டியுள்ளது.

கேரள மக்கள் நாளை திருவோணம் பண்டிகை கொண்டாடுகின்றனர். ஓணம் அன்று அவர்கள் தங்கள் வீட்டு வாசலில் அத்தப்பூ கோலமிடுவது வழக்கம். இதனால் ஓணம் என்றாலே பூ விற்பனை சூடுபிடிக்கும். அதிலும் குமரி மாவட்டத்தில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற தோவாளை பூ மார்க்கெட்டில் இருந்து பூ வாங்கிச் செல்ல கேரளாவில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வருவார்கள்.

நாளை ஓணம் பண்டிகை கொண்டாடவிருப்பதையடுத்து நேற்று காலை முதலே தோவாளை பூ மார்க்கெட்டில் திரும்பும் திசையெல்லாம் கேரள வியாபாரிகள் கூட்டம் தான். கடந்த ஆண்டு ஓணம் பண்டிகையின்போது தோவாளை மார்க்கெட்டில் பூக்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்த ஆண்டு அப்படி எதுவும் நடக்காமல் இருக்க தர்மபுரி, சத்தியமங்கலம், ஒசூர் பகுதிகளில் இருந்து ஏராளமான லாரிகளில் பூக்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால் நேற்று மார்க்கெட்டில் பூக்களுக்கு தட்டுப்பாடில்லாமல் இருந்தது.

கடந்த ஆண்டு ஓணம் பண்டிகையின்போது ரூ.2000க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ பிச்சிப்பூவின் இன்றைய விலை ரூ.750 ஆகும்.

தோவாளை பூ மார்க்கெட்டில் பூக்களின் இன்றைய விலை(1 கிலோ)

மல்லிகைப் பூ - ரூ.700
வாடாமல்லி - ரூ. 50
கேந்தி - ரூ.30
சம்பங்கி - ரூ.200
கோழிப்பூ - ரூ. 25

ஓணம் என்றால் அத்தப்பூக்கோலம் தவிர அறுசுவை விருந்தும் உண்டு. விருந்துக்கு தேவையான காய்கறிகளை கேரள வியாபாரிகள் தமிழகத்தில் இருந்து தான் வாங்கிச் செல்கின்றனர்.

ஓணம் வ்ந்தாலே நாகர்கோவில் அப்டா மார்க்கெட், வடசேரி கனக மூலம் சந்தை, பஞ்சலிங்கபுரம் சந்தை, மார்த்தாண்டம் காய்கறி சந்தை, தக்கலை வாழைத்தார் சந்தை,குலசேகரம் காய்கறி சந்தை ஆகியவற்றில் வியாபாரம் சூடுபிடித்துவிடும். நேற்று காலை முதல் இந்த சந்தைகளுக்கும் கேரள வியாபாரிகள் படையெடுத்தனர்.

கதளி, ரஸ்தாளி, பச்சை வாழை, செவ்வாழை பழத்தார் ஒன்று ரூ.500 முதல் ரூ.1000 வரை விற்பனையானது. ஆனால் வாழை இலைக்கு தான் கடும் தட்டுப்பாடாக இருந்தது. அதனால் ஒரு வாழை இலை ரூ.5 முதல் ரூ.10 வரை விற்கப்பட்டது. பண்டிகை அன்று வாழை இலையில் விருந்து உண்பது தான் சிறப்பு என்பதால் அதிக விலை கொடுத்து வாழை இலைகளை வியாபாரிகள் வாங்கிச் சென்றனர்.

மேலும் வெள்ளரிக்காய், சேனை, பூசணிக்காய், தடியங்காய், சீனி அவரைக்காய், முள்ளங்கி, முட்டைக் கோஸ், காலி பிளவர், உருளைக்கிழங்கு போன்றவையும் இன்று அதிக விலைக்கு விற்கப்பட்டன.

English summary
Thovalai flower market seemed pretty busy on monday as merchants from Kerala came there to buy flowers ahead of Onam festival.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X