தமிழகத்தில் 'அரேஞ்சுடு மேரேஜுக்கு' 59 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவு!

Subscribe to Oneindia Tamil

Arranged Marriage
சென்னை: பெற்றோர் பார்த்து செய்து வைக்கும் திருமணமே சரியானது என்று தமிழகத்தில் 59 சதவீதம் பேர் மட்டுமே கருத்துத் தெரிவித்துள்ளனர். காதல் திருமணத்துக்கு 41 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது.

என்டிடிவி நடத்தியுள்ள சர்வேயில் இந்த விவரம் தெரியவந்துள்ளது.

Arranged marriage தான் சரி என்று தேசிய அளவில் 74 சதவீதம் பேர் கூறியுள்ளனர். உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணாவில் தான் மிக அதிகபட்சமாக 88 சதவீதம் பேர் பெற்றோர் பார்த்து நடத்தி வைக்கும் திருமணமே சரி என்று கூறியுள்ளனர்.

ஆனால், தமிழகத்திலும் டெல்லியிலும் மேற்கு வங்கத்திலும் பெற்றோர் நிச்சயித்த திருமணத்துக்கு 59 சதவீதமே ஆதரவு கிடைத்துள்ளது.

தனிக் குடித்தனத்துக்கு தென்னிந்தியாவில் தான் ஆதரவு அதிகம்:

அதே போல பெற்றோருடன் இல்லாமல் தனிக் குடித்தனம் செய்வதே சரியானது என்று தென்னிந்தியாவில் அதிகம் பேர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

பெற்றோருடன் சேர்ந்து வாழ்வதே சரி என்று தேசிய அளவில் 89 சதவீதம் பேர் கருத்துத் தெரிவித்துள்ளனர். வட இந்தியாவில் 96 சதவீதம் பேர் இதைச் சொல்ல, தென்னிந்தியாவில் 77 சதவீதத்தினர் மட்டுமே பெற்றோருடன் சேர்ந்து வாழ்வது சரி என்று கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+