ஸ்பெயினிலிருந்து நெதர்லாந்து சென்ற விமானம் கடத்தப்பட்டதாக பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

ஆம்ஸ்டர்டாம்: ஸ்பெயின் நாட்டின் மலாகா நகரில் இருந்து நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாம் நகருக்குச் சென்ற விமானம் கடத்தப்பட்டதாக பரபரப்பு எழுந்தது. ஆனால், அது பைலட்-தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துக்கு இடையே நடந்த தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட குழப்பத்தால் பரவிய புரளி என்று பின்னர் தெரியவந்தது.

முன்னதாக அந்த விமானம் கடத்தப்பட்டதாக தகவல் வந்ததும் அதை நெதர்லாந்து நாட்டின் 2 எப் 16 ரக போர் விமானங்கள் சூழ்ந்து ஆம்ஸ்டர்டாமின் ஷிபோல் விமான நிலையத்தில் தரையிறக்கின.

அந்த ஏர் பஸ் விமானம் ஸ்பெயின் நாட்டின் வியூலிங்க் விமான நிறுவனத்துக்குச் சொந்தமானதாகும். விமானம் தரையிறங்கியதும் அதை கமாண்டோ படையினர் சூழ்ந்தனர்.

ஆனால், தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துக்கும் பைலட்டுகளுக்கும் இடையே தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட குளறுபடியால், விமானம் கடத்தப்பட்டதாக தவறான தகவல் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துக்கு வந்து சேர்ந்தது பின்னர் தெரியவந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+